Posts

குடியரசு தினம்

இன்று கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.குடியரசு தினத்தை பற்றியும் எந்த ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் எடுத்துரைத்தனர்.இன்று கல்லூரியில் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றோம்.இந்நிகழ்வு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாரன்கைமா

பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும்.பாரன்கைமா செல்கள் சம அளவுடைய மெல்லிய சுவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளியுடன் கூடிய திசுவாகும்.நீர் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியைக் கொண்டுள்ளது.

சகப்பிணைப்பு

நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறும் வகையில் அணுக்கள் அவற்றின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை மற்ற அணுக்களுடன் பங்கீடு செய்து இணைக்கின்றன.இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்து அவற்றிற்கிடையே உருவாக்கும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படுகிறது. உ.ம் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து H2 மூலக்கூறுகள் உருவாகிறது.

பதங்கமாதல்

சில திண்மங்களில் திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயுவாக மாறுகிறது. திண்ம நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைமைக்கு மாறும் செயல் பதங்கமாதல் எனப்படுகிறது.இந்த ஆவியை குளிர்விக்கும் போது மீண்டும் அதன் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

தாவர திசுக்கள்

ஒரே மாதிரியான தோற்றம், அமைப்பு மற்றும் செயல்பாடுகள் கொண்ட செல்களின் தொகுப்பு திசுக்கள் ஆகும்.தாவரங்கள் உடலம் மற்றும் இனப்பெருக்கத் திசுக்களால் ஆனவை.ஆகவே தாவர திசுக்கள் பொதுவாக இருவகைப்படும்.அவை ஆக்குத்திசு ம ற்றும் நிலையான திசு. மெரிஸ்டோஸ் அல்லது ஆக்குத்திசு எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

இராஜதிராவகம்

உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே  HClமற்றும் HNO3 உடன் வினைபுரியாது என்பது நாம் அறிந்த ஒன்று.ஆனால் இந்த இரண்டு அமிலங்களின் கலவை தங்கத்தைக் கரைக்கும் திறனுள்ளது.அந்த கலவையின் பெயர் இராஜதிராவகம் எனப்படுகிறது.

அயனிப் பிணைப்பு

அயனிப் பிணைப்பு என்பது ஒரு நேர்மின் அயனிக்கும் , எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு ஆகும்.ஒரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்து மாற்றப்படும் போது இப்பிணைப்பானது உருவாகிறது.