Posts

Showing posts from July, 2018

விண்வெளி நிலையத்தில் ரோபோ

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு சைமன் என்ற செயற்கை அறிவு ரோபோ ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.இது கால்பந்து போல தோற்றமளிக்கும்.பின் பக்கத்தில் கணினி இணைக்கப்பட்டிருக்கும்.விண்வெளி விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படக் கூடியது இந்த ரோபோ.

தொற்றுநோய்கள்

மனிதர்களுக்கு பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகள் ஆகியவற்றால் நீர், கொசு, காற்று மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவர்க்கு எளிதாகப் பரவுகின்றன.இந்நோயால் பெரும் பாதிப்பு ஏற்படுகின்றன.

அப்துல் கலாம் நினைவுநாள்

இன்று அப்துல் கலாம் அவர்களின் மூன்றாவது நினைவு நாள் கல்லூரியில் நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.அவரைப் பற்றிய தகவல்களை இன்று வகுப்பறையில் கலந்துரையாடல் மூலம் அனைத்து மாணவர்களும் பரிமாற்றம் செய்து கொண்டோம்.அவர் எழுதிய புத்தகங்கள், பொன்மொழிகள் மற்றும் செயற்கைக்கோள் ஆகியவை பற்றி நாங்கள் அறிந்து கொண்டோம்.

அணுக்களும் மூலக்கூறுகளும்

இன்று நான் அணு மற்றும் மூலக்கூறு என்ற தலைப்பில் மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்பித்தலை மேற்கொண்டேன்.எனக்கு இன்னும் அனுபவம் தரக்கூடியதாக அமைந்துள்ளது.எனது தவறுகளைத் திருத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாகவும் இருந்தது.அணு மற்றும் மூலக்கூறு பற்றி நான் இன்னும் நிறைய தகவல்களையும் தெரிந்து கொண்டேன்.

செயலாற்றல் குறைபாட்டினைப் புரிந்துகொள்ளல்

செவி, பார்வை மற்றும் பேச்சுத் திறன் போன்றவற்றில் குறைபாடு உள்ள குழந்தைகளை எவ்வாறு கண்டுபிடிப்பது, அதை எவ்வாறு சரிசெய்வது என்பதைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டேன்.செயலாற்றல் குறைபாடு என்பது ஒருவரது செயல்திறனில் குறைவு ஏற்படுதல் ஆகும்.இக்குறைபாடு மரபு வழியாகவும் பக்கவாதம், சர்க்கரை நோயாலும் ஏற்படுகின்றன.

ஒய்வு மற்றும் இயக்கம்

ஒய்வு மற்றும் இயக்கம் என்ற தலைப்பில் இன்று நான் வகுப்பறையில் கற்ப்பித்தேன்.நான் மிகவும் நன்றாக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்தேன். ஆசிரியர் எனக்கு சில தவறுகளையும் , பாடத்தில் சில மாற்றங்களையும் கூறினார்.அதை நான் அடுத்த வகுப்பில் மாற்றிக் கொள்வேன்.

கைத்தட்டலினால் ஏற்படும் நன்மைகள்

கைத்தட்டலினால் இரத்த அழுத்தம் சீராகவும் மூளை நன்குச் சுறுசுறுப்பாகவும் அமைகின்றன.கைத்தட்டல் மனிதர்களுக்கு நன்மை ஏற்படுத்தக் கூடியதாக காணப்படுகின்றன.இதனால் நினைவாற்றல் திறன் அதிகரிக்கின்றது.இந்தப் பயிற்சியை தினமும் காலையில் ஒரு இருபது நிமிடங்கள் செய்யலாம்.இதனால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.

ஃபார்மலினால் ஏற்படும் பாதிப்பு

ஃபார்மலின் என்ற வேதிப்பொருள் பொருட்கள் கெட்டுப்போகாமல் அதிக இருப்பதற்காகப் பயன்படுத்தப்படுகின்றன.ஆனால் இந்த வேதிப்பொருளால் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகின்றன.கேன்சர், கல்லீரல்  பிரச்சனை மற்றும் பார்வைத் திறன் குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன.

யோகா மற்றும் உடற்பயிற்சி, உடல் நலம்

இன்று உடற்பயிற்சி பற்றி நாங்கள் நிறையாத் தெரிந்துக் கொண்டோம். வகுப்பறையில் அனைவரும் இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி செய்தோம் மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகளையும் தெரிந்துக் கொண்டோம். யோகாவின் வகைகள் மற்றும் அவை எவ்வாறு அறிமுகம் ஆனது என்பதையும் நன்றாக அறிந்தோம்.

இன்றையச் செயல்பாடுகள்

இன்று ஆசிரியர் இரண்டாம் ஆண்டில் படிக்கப் போவதையும்,அதற்கானப் பாடப்பொருளையும் அளித்தனர். அதன் பிறகு ஆசிரியர் பயிற்சி பற்றியும்,பள்ளியில் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்பதையும் எவ்வாறு பாடத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதையும் விளக்கம் அளித்துள்ளன.