Posts

Showing posts from January, 2019

குடியரசு தினம்

இன்று கல்லூரியில் குடியரசு தினத்தை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.குடியரசு தினத்தை பற்றியும் எந்த ஆண்டு முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பதையும் எடுத்துரைத்தனர்.இன்று கல்லூரியில் நடத்திய போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்றோம்.இந்நிகழ்வு எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாரன்கைமா

பாரன்கைமா உயிருள்ள செல்களால் ஆன எளிய நிலைத்த திசு ஆகும்.பாரன்கைமா செல்கள் சம அளவுடைய மெல்லிய சுவர் உடைய முட்டை வடிவ அல்லது பலகோண அமைப்புடைய செல் இடைவெளியுடன் கூடிய திசுவாகும்.நீர் தாவரங்களில் பாரன்கைமா செல்கள் காற்றிடைப் பகுதியைக் கொண்டுள்ளது.

சகப்பிணைப்பு

நிலையான எலக்ட்ரான் அமைப்பைப் பெறும் வகையில் அணுக்கள் அவற்றின் வெளிக்கூட்டில் உள்ள எலக்ட்ரான்களை மற்ற அணுக்களுடன் பங்கீடு செய்து இணைக்கின்றன.இரு அணுக்கள் சமமாக எலக்ட்ரான்களை பங்கீடு செய்து அவற்றிற்கிடையே உருவாக்கும் பிணைப்பு சகப்பிணைப்பு எனப்படுகிறது. உ.ம் இரண்டு ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து H2 மூலக்கூறுகள் உருவாகிறது.

பதங்கமாதல்

சில திண்மங்களில் திரவ நிலை வழியாக செல்லாமல் நேரடியாக வாயுவாக மாறுகிறது. திண்ம நிலையிலிருந்து நேரடியாக வாயு நிலைமைக்கு மாறும் செயல் பதங்கமாதல் எனப்படுகிறது.இந்த ஆவியை குளிர்விக்கும் போது மீண்டும் அதன் இயல்பு நிலைக்குத் திரும்புகிறது.

தாவர திசுக்கள்

ஒரே மாதிரியான தோற்றம், அமைப்பு மற்றும் செயல்பாடுகள் கொண்ட செல்களின் தொகுப்பு திசுக்கள் ஆகும்.தாவரங்கள் உடலம் மற்றும் இனப்பெருக்கத் திசுக்களால் ஆனவை.ஆகவே தாவர திசுக்கள் பொதுவாக இருவகைப்படும்.அவை ஆக்குத்திசு ம ற்றும் நிலையான திசு. மெரிஸ்டோஸ் அல்லது ஆக்குத்திசு எனும் வார்த்தை கிரேக்க மொழியில் இருந்து பெறப்பட்டது ஆகும்.

இராஜதிராவகம்

உலோகங்களில் தங்கம் மற்றும் வெள்ளி மட்டுமே  HClமற்றும் HNO3 உடன் வினைபுரியாது என்பது நாம் அறிந்த ஒன்று.ஆனால் இந்த இரண்டு அமிலங்களின் கலவை தங்கத்தைக் கரைக்கும் திறனுள்ளது.அந்த கலவையின் பெயர் இராஜதிராவகம் எனப்படுகிறது.

அயனிப் பிணைப்பு

அயனிப் பிணைப்பு என்பது ஒரு நேர்மின் அயனிக்கும் , எதிர்மின் அயனிக்கும் இடையே நிலைமின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் பிணைப்பு ஆகும்.ஒரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்து ஒன்றோ அல்லது அதற்கு மேற்பட்ட எலக்ட்ரான்களோ மற்றொரு அணுவின் இணைதிறன் கூட்டிலிருந்து மாற்றப்படும் போது இப்பிணைப்பானது உருவாகிறது.

மின்காந்தத் தூண்டல்

மின்னோட்டம் பாயும் கம்பியைச் சுற்றில் காந்தப்புலம் உருவாகிறது என ஓர்ஸ்டட்டால் நிரூபிக்கப்பட்டபோது தலைகீழ் விளைவுகளும் முயற்சி செய்யப்பட்டது.கடத்திடன் இணைந்த காந்தப் பாயம் மாறும் போது கடத்தி வழியாக ஒரு மின்னியக்கு விசையை விளக்கினார் மைக்கேல் ஃபாரடே .இதனை நிரூபிப்பதற்காக பல்வேறு பரிசோதனை நடத்தப்பட்டது.

புரதங்கள்

மனித உடலுக்குத் தேவையான முக்கியமான ஊட்டச்சத்து புரதங்கள் ஆகும்.இது உடல் திசுக்கள் உருவாக்கத்திற்கு தேவையான அடிப்படை பொருளாகவும், எரிபொருளாகவும் செயல்படுகிறது.புரதங்களானது சக்தியை கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் கொழுப்புகளை விட அதிகமான அளவில் கொடுக்கிறது.புரதத்தில் உள்ள அமினோ அமிலங்கள் சிறுகுடல் பகுதியில் உறிஞ்சப்படுவது மிகவும் முக்கியமானதாகும்.

பள்ளியும் பண்பாட்டுச் சூழலும்

பள்ளியின் முக்கிய பணியே மாணவர்களை " பண்பாட்டிற்கு இசைவாக மாற்றுதல்" ஆகும்.இளைஞர்களும், பெண்டிரும் கலாச்சாரப் பாரம்பரியத்தினை எண்ணங்களை, பழக்கவழக்கங்களை தம் முன்னோர்களிடமிருந்து பெற்று அவற்றை , மதித்துப் போற்றி அவற்றினின்றும் வழுவாது , தம் வருங்கால சந்ததியினருக்கு வழங்க வேண்டும்.

சமயசார்பின்மையும் கல்வியும்

இந்தியா சமயசார்பின்மையை தனது அடிப்படையாகக் கொள்கையாகக் கொண்டுள்ளது.இந்திய பள்ளியில் சமய போதனைகளுக்கு இடமில்லை.ஆனால் சமயங்கள் பற்றிய ஒப்பீட்டுப் பார்வையை வளர்த்திட ஆட்சேபம் இல்லை.அறநெறி கல்வி அளிக்கப்படலாம்; அனைத்து சமயங்களில் அடிப்படையாகக் கருத்துகளை அறியச் செய்து பரந்த மனப்பான்மை வளர்த்தல்.

நாட்டுப் பற்றும் கல்வியும்

"அனைவருக்கும் கல்வி" என்பது எல்லோராலும் ஏற்கப்பட்ட கருத்தாகி விட்டதோடு அரசின் பொருப்பாகவும் ஆகியுள்ளது.நாட்டுப் மற்றும் செயல் வடிவம் பெற வேண்டுமானால் சமூக பொருளாதாரத்தை விரைவுபடுத்தும் தரமான, காலத்திற்கேற்ற கல்வியை அனைவருக்கும் கிடைக்க செய்ய பொதுநலனில் நாட்டமுள்ளோர் தீவிர முனைப்பைக் காண்பிக்க வேண்டும்.

கூட்டுறவு கற்றலின் நன்மைகள்

கூட்டுறவு கற்றலின் வழியாக கற்றலை மேற்கொள்ளும் போது கற்றல் சிறப்பாக அமைகிறது.போட்டி மனப்பான்மை குறைகிறது.பதட்டமான சூழல் தவிர்க்கப்படுகிறது; மாணவர்களிடையே பாதுகாப்பு உணர்வு அதிகரிக்கிறது.கூட்டுறவு கற்றலினால் மாணவர்களிடத்தில் குழு இயக்கம், குழு உணர்வு போன்றவை ஏற்படுகின்றன.தலைமைப்பண்பு வளர்த்திட கூட்டுறவுக் கற்றல் உதவுகிறது.

தலைகீழ் விகித விதி

இரண்டு மாறுபட்ட தனிமங்கள் தனித்தனியே ஒரே நிறையுள்ள மூன்றாவது தனிமத்துடன் சேரும் போது அவற்றின் நிறைகளின் விகிதம் சமமாகவோ அல்லது எளிய பெருக்கல் விகிதத்திலோ இருக்கும். எ.கா. இங்கு கார்பன் , ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் உடன் இணைந்து மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு உருவாக்கின.இவை சேர்ந்து நீரையும் தருகின்றன.

கூடுகை வினை

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பொருட்கள் ஒன்று சேர்ந்து ஒரு பொருளை உருவாக்கும் வினை கூடுகை வினை எனப்படுகிறது.வெவ்வேறு தனிமங்கள் சேர்ந்து ஒரு சேர்மத்தை உருவாக்கும் கூடுகை வினையானது சில அடிப்படை விதிகளுக்கு உட்பட்டு நிகழ்கிறது. உ.ம் சோடியம் மற்றும் குளோரின் சேர்ந்து சோ டியம் குளோரைடு என உருவாகிறது.

பிரெளனியன் நகர்வு

இது ஒரு இயக்கப் பண்பாகும், கூழ்ம கரைசல்களை செறிவு மிக்க நுண்ணோக்கியால் பார்க்கும் போது கூழ்மத் துகள்கள் இயங்கும்.ஒழுங்கற்ற நிலையில் சீராகவும் வேகமாகவும் நகர்ந்து கொண்டிருப்பதைக் காண முடியும்.இந்த நகர்வே பிரெளனியன் நகர்வு எனப்படும்.

திரவங்கள்

திரவங்கள் ஒழுங்கான வரிசை அமைப்பை பெற்றிருப்பதில்லை.வலிமை குறைந்த ‌கவர்ச்சி விசையால் இணைக்கப்பட்டுள்ளது.திண்மத்துகள்களைவிட , அதிக இயக்க ஆற்றலை பெற்றுள்ளது.திடப்பொருளை ஒப்பிடும் போது திரவத்தில் துகள்கள் சற்று இடைவெளியில் உள்ளன.ஒன்றோடொன்று மோதலில் ஈடுப்பட்டு ஊடகம் முழுவதும் எளிதில் நகரும்.

வாயுக்களின் மீது மின்னழுத்தத்தின் விளைவு

ஒரு பலூனை ஊதும் போது பலூனில் அதிக வேகத்தில் காற்று துகள்கள் செல்கிறது.இந்த் துகள்கள் பலூனில் உட்பக்கங்களில் மோதி அதன் மீது செலுத்தப்பட்ட அழுத்தம் பலூனை விரிவடைய செய்கிறது.அழுத்தமானது வாயுவின் வெப்பநிலை மற்றும் அதன் கன அளவை சார்ந்துள்ளது.

நாகியின் படிமம்

உடல் ஊனம், செயலிக்க குறைபாடு நோய்களின் தாக்கம் போன்ற பல்வேறு நிலைகளை கொண்டு ஆரோக்கிய நிலைகளை ஆராய முற்பட்டனர்.ஒருவரது உடலை மருத்துவ ரீதியாக ஆராய்ந்து அதற்கான விளக்கங்களை அளித்தார்.உடலில் பல்வேறு பிறழ்வுகள் காரணமாக குறைபாடு ஏற்படுகின்றன.

பொங்கல் விழா

இன்று கல்லூரியில் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.பொங்கல் வைத்தும் பாரம்பரிய நடனம் மற்றும் பாடல் பாடியும் ஆடியும் பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடப்பட்டது.நாங்கள் இன்று மிகவும் மகிழ்ச்சியாக இருந்தோம்.

மதிப்பிடலில் நியாயத்தன்மை

இன்று மதிப்பிடலில் நியாயத்தன்மை என்ற தலைப்பில் பாடம் கற்பித்தேன்.ஆசிரியர் நான் நன்றாக பாடம் எடுத்தேன் என்று பாராட்டினார்.எனக்கும் மாணவர்களுக்கும் இடையே ஒரு சிறப்பான இடைவினைக் காணப்பட்டது.இத்தலைப்போட முக்கிய கருத்து வகுப்பறையில் அனைத்து மாணவர்களையும் சமமாக வளிநடத்துவதாகும்.இதில் நேர்காணல் செய்மு றை சோ தனை வாய்மொ ழி சோ தனை போன்ற முறைகளை முக்கியமாகப் பயன்படுத்த வேண்டும்.

டிஸ்கிராபியா

இக்குறைபாடுடைய குழந்தைகள் குறிப்பிட்ட சில எழுத்துக்களை இனம் காண்பதிலும் அவற்றை எழுதுவதிலும் குறைபாடு பெற்றிருப்பர் இதற்கு டிஸ்கிராபியா என்பதாகும்.எழுத்துகளை தவறாக எழுதுவது, எழுத்துக்களை விட்டு விட்டு எழுதுவதும் இவர்கள் செய்யும் பிழையாகும்.

மெய்பிம்பமும் மாய பிம்பமும்

பொருளிலிருந்து வெளியேறும் கதிர்கள் எதிரொளிப்புக்குப் பின் உண்மையாகவே சந்தித்தல் அதனால் உருவாகும் பிம்பம் மெய்பிம்பம் எனப்படும்.ஆனால் எதிரொலிப்புக்குப் பின் சந்திக்காமல் பின்னோக்கி தீட்டப்பட்டுள்ளது போது சந்தித்தால் அவை மாய பிம்பம் எனப்படும்.

செயலியக்கக் குறைபாடு

ஒரு மனிதன் ஒரு பணியினை மேற்கொள்ளும் போது அதில் முழுமையாகவும் , திறமையாகவும் செயல்படுவதில் சுணக்க நிலை ஏற்படுவது ஆகும்.இதில் உணவு தயாரித்தல், வீட்டுப் பணிகள் மற்றும் வாகனம் ஓட்டுதல் போன்ற குறைபாடுகள் குறிப்பிடப்படுகிறது.

டிஸ்லெக்சியா வாசித்தல் குறைபாடு

குழந்தைகளுக்கு வாசிப்பதில் ஏற்படும் குறைப்பாட்டினை டிஸ்லெக்சியா என்பதாகும்.டிஸ்லெக்சியா என்னும் சொல் கி ரேக்க மொழி சொல்லாகும்.டிஸ் என்றால் கடினம் லெக்சியா என்றால் சொற்கள் தொடர்பான மொழி என்று பொருளாகும்.இது மூளை இயக்கம் தொடர்பான கற்றலில் பல்வேறு விதங்களில் பாதிப்பு அடைகின்றன.

குறையரிச் சோதனை

மாணவர்கள் எதில் குறைபாடு கொண்டு காணப்படுகிறார்கள் என்று ஆராய்ந்து அக்குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதையும் அவற்றை எவ்வாறு சரிசெய்வது என்பதையும் அறியப்படுகிறது.இச்சோதனை மாணவர்களின் தேர்ச்சி விகிதம் கொண்டும் அமைக்கப்படுகின்றன.

விளையாட்டு நிகழ்ச்சி

இன்று கல்லூரியில் பல்வேறு வகையானப் போட்டிகள் நடத்தப்பட்டன.அனைவரும் மகிழ்ச்சியாக கலந்துக்கொண்டோம்.இன்று நான் கோ கோ கூடைப்பந்து போன்ற போட்டிகளில் கலந்து கொண்டேன் மற்றும் கோ கோ வில் வெற்றி பெற்றேன்.இன்றைய நாளை வாழ்வில் எப்போதும் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.

மின்விசை

மின்னூட்டங்களுக்கிடையே உருவாகும் விசை மின்விசை எனப்படும்.இவ்விசை தொடுகையில்லா விசை வகையைச் சார்ந்தது.ஏனெனில் மின்னூட்டங்கள் ஒன்றுக்கொன்று தொடுதல் இல்லாமலேயே இவ்விசை செயல்படும்.மின்விசை கவர்ச்சி விசை மற்றும் விலக்கு விசை என இரு வகையாக காணப்படுகின்றன.